உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

ஓய்வூதியர்கள் தர்ணா போராட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடந்தது.சங்க மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன், செயலாளர் விஜயராகவன் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் குப்பன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்க வேண்டும்.மருத்துவக் காப்பீட்டில் காசில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர். அரசு ஊழியர் சங்கம் முன்னாள் மாவட்டச் செயலாளர் சேகர், ஓய்வூதியர் சங்கம் மாவட்ட இணைச் செயலாளர் கருப்பையா உட்பட சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி