உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்

ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே பொழிகால் கிராமத்தில் விவசாய நிலத்தில் ஆபத்தான நிலையில் சாய்ந்துள்ள மின்கம்பத்தால் மக்கள் அச்சப்படுகின்றனர். விபத்திற்கு முன்பு சீரமைக்க வேண்டும். பொழிகால் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கால்நடை வளர்ப்பு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. முதுகுளத்துார் துணை மின்நிலையத்திலிருந்து கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்கம்பம் வழியாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. விவசாய நிலத்தில் உள்ள மின்கம்பம் சாய்ந்து உயரழுத்த மின்கம்பி தாழ்வாக செல்கிறது. இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய வாகனங்கள் கொண்டு செல்ல முடியாமல் உழவு செய்ய கூட முடியாமல் தரிசாக விடப்படும் சூழ்நிலை மாறி உள்ளது. மின்கம்பம் சாய்ந்து தாழ்வாக செல்லும் மின்கம்பியால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு முதுகுளத்துார் அருகே அறுந்து கடந்த மின்கம்பியை மிதித்ததில் ஒருவர் இறந்தார். எனவே மின் வாரியத்துறையினர் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை