உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரவில் பறவைகள் வேட்டையாடல் துப்பாக்கி சத்தத்தால் மக்கள் அச்சம்

இரவில் பறவைகள் வேட்டையாடல் துப்பாக்கி சத்தத்தால் மக்கள் அச்சம்

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் சனவேலி, கோட்டைக்கரை ஆற்றுப்பகுதியில் பறவைகளை வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கி சத்தத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். சனவேலி கோட்டைக்கரையாறு, ஓடைகால், குல மாணிக்கம், மேட்டு கற்களத்துார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரத்தில் டூவீலர்களில் வரும் மர்ம நபர்கள், பறவைகளை வேட்டையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இரவு நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்தி பறவைகளை வேட்டையாடி வருகின்றனர். இதனால் அப்பகுதி கிராம வாசிகள் துப்பாக்கி சத்தத்தை கேட்டு அச்சமடைந்துள்ளனர். பறவைகளை வேட்டையாடுபவர்களிடம் துப்பாக்கி உள்ளதால் மக்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது.எனவே வனத்துறை அதிகாரிகள் இரவு நேரத்தில் பறவைகளை வேட்டையாடுவோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !