உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடியில் குடிநீர் குழாய் பதித்து 50 நாளாகியும் ரோடு போட மனமில்லை சகதியில் சிக்கும் மக்கள்

பரமக்குடியில் குடிநீர் குழாய் பதித்து 50 நாளாகியும் ரோடு போட மனமில்லை சகதியில் சிக்கும் மக்கள்

பரமக்குடி : பரமக்குடி வசந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதித்து 50 நாட்கள் ஆகியும் ரோடு போட மனம் இல்லாததால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சேற்றில் செல்கின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தும் வகையில் நெடுஞ்சாலை உட்பட ரோட்டோரங்களில் குழாய் பதிக்கும் பணிகள் நடக்கிறது. இந்நிலையில் பரமக்குடி ஆற்றுப்பாலம் பகுதியில் இருந்து மதுரை நெடுஞ்சாலையை இணைக்க 50 நாட்களுக்கு முன்பு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டது. இதன்படி ஆற்றுப்பாலம் தலைமை தபால் நிலையம், போலீஸ் ஸ்டேஷன், வசந்தபுரம் ரோடு பகுதிகளில் பள்ளம்தோண்டப்பட்டது. அப்போது குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இரண்டு மாதங்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. இந்நிலையில் குண்டும், குழியுமான ரோட்டில் பள்ளி மாணவர்கள் துவங்கி முதியவர்கள் என பள்ளி செல்வோர், பென்ஷன் வாங்க வருவோர் மற்றும் தெருவில் நடக்கும் மக்கள் அனைவரும் தடுமாறுகின்றனர். இப்பகுதி இளையான்குடி ரோடு, போலீஸ் ஸ்டேஷன் ரோடு மற்றும்மதுரை, மண்டபம் ரோட்டை இணைக்கும் வகையில் இருக்கிறது. இதன் காரணமாக பரமக்குடி நகராட்சி பகுதியில் முற்றிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:நகராட்சி கவனத்திற்குகொண்டு வராமல், பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டது. மேலும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ரோடு அமைக்கும் பணிகளை மேற்கொள்ள இரண்டு முறை கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டுஉள்ளது என்றனர்.ஆகவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி