மேலும் செய்திகள்
வழிகாட்டி பலகை மக்கள் கோரிக்கை
31-Mar-2025
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகள் வாங்க செல்வதற்கு, வழிகாட்டும் அறிவிப்பு பலகை இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். திருவாடானை அருகே ஓரியூரில் 2018 ல் அரசு தோட்டக்கலை பண்ணை 36 ஏக்கரில் துவங்கபட்டது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நிழல் குடில், அமைத்து பல்வேறு வகையான மரக்கன்றுகள் வளர்க்கபட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கபட்டு வருகிறது. விவசாயிகள் சென்று பழக்கன்றுகளை வாங்கி பயன் அடைகின்றனர். ஓரியூரிலிருந்து எஸ்.பி.பட்டினம் செல்லும் விலக்கு ரோட்டிலிருந்து 2 கி.மீ.,ல் தோட்டக்கலை பண்ணை உள்ளது. இப் பண்ணைக்கு செல்லும் மக்கள் விலக்கு ரோட்டில் நின்று கொண்டு வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். உடனடியாக வழிகாட்டும் பலகை வைக்க வேண்டும்.இது குறித்து ஓரியூர் மக்கள் கூறுகையில், தோட்டக்கலை பண்ணை அமையும் போது வழிகாட்டும் பலகை இருந்தது. சில மாதங்களுக்கு முன்பு பலத்த காற்றில் சாய்ந்தது. அதை எடுத்து சென்ற அலுவலர்கள் மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வெளியூர்களிலிருந்து வருபவர்கள் வழி தெரியாமல் சிரமம் அடைந்துள்ளனர். அந்தபக்கமாக வாகனங்களில் செல்பவர்களிடம் தோட்டக்கலை பண்ணை எங்கு உள்ளது என்று கேட்டு செல்கின்றனர் என்றனர்.
31-Mar-2025