உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / நத்தம் ஊராட்சியை பேரூராட்சியில் இணைப்பதற்கு  மக்கள் எதிர்ப்பு

நத்தம் ஊராட்சியை பேரூராட்சியில் இணைப்பதற்கு  மக்கள் எதிர்ப்பு

ராமநாதபுரம்; அபிராமம் பேரூராட்சியுடன் நத்தம், மணிநகரத்தை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் 3வது முறையாக மனு அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: நத்தம் ஊராட்சி மணிநகரம், நத்தம் பகுதியில் ஏழை, கூலி, விவசாயத் தொழிலாளர்கள் வாழ்கிறோம். பெரும்பாலான பெண்கள் நுாறு நாள் வேலையை நம்பியுள்ளோம். நத்தத்தை அபிராமம் பேரூராட்சியுடன் இணைத்தால் நுாறு நாள் வேலை பறிபோய்விடும். வீட்டு வரி, குடிநீர், சாக்கடை வரியும் அதிகரித்து விடும்.எனவே நத்தம் ஊராட்சியை அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ