உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கால்நடை மருத்துவமனை சேதம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

கால்நடை மருத்துவமனை சேதம் சீரமைக்க மக்கள் வலியுறுத்தல்

திருப்புல்லாணி : திருப்புல்லாணியில் அரசு கால்நடை மருத்துவமனை கடந்த 2018ல் அமைக்கப்பட்டது தொடர் பராமரிப்பு இன்றி மூன்றாண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது. தரமற்ற கட்டுமானப் பொருள்களை பயன்படுத்தி கட்டடம் எழுப்பப்பட்டுள்ளதால் கட்டடத்தின் சுவர் மற்றும் துாண்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இங்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது ஆடு, கோழி, மாடு உள்ளிட்ட கால்நடைகளை பரிசோதனை செய்வதற்காக வருகின்றனர். இந்நிலையில் சேதமடைந்த கட்டடத்தால் விபத்து அபாயம் உள்ளது. எனவே புதிதாக நிதி ஒதுக்கீடு செய்து கட்டடத்தை மராமத்து பணிகளை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !