உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருப்புல்லாணி கோயிலில் நகைகள் மாயம்; ஸ்தானிகரை காவலில் விசாரிக்க மனு

திருப்புல்லாணி கோயிலில் நகைகள் மாயம்; ஸ்தானிகரை காவலில் விசாரிக்க மனு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் ரூ.ஒரு கோடி மதிப்புள்ள நகைகள் மாயமான வழக்கில் சரணடைந்த ஸ்தானிகர் சீனிவாசன் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை போலீஸ் காவலில் விசாரிக்க கோரி குற்றப்பிரிவு போலீசார் ராமநாதபுரம் 2வது குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு செய்தனர்.திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் திருவிழா காலங்களில் தாயார், சுவாமிக்கு அணிவிக்கப்படும் ரூ.ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மாயமானது.திவான் பழனிவேல் பாண்டியன் புகாரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகைகளின் பொறுப்பாளரான கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்கு பதிந்து விசாரித்தனர். ஸ்தானிகர் மற்றும் அவருடன் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களிடமும் விசாரணை நடத்தினர்.இந்நிலையில் சீனிவாசன் ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அதில் நீதிபதி இடைக்கால முன் ஜாமின் வழங்கினார்.உயர்நீதிமன்றம் அமைத்த விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ததை தொடர்ந்து சீனிவாசனுக்கு வழங்கிய இடைக்கால முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஸ்தானிகர் சீனிவாசனை கைது செய்ய போலீசார் தேடி வந்தனர்.இதையறிந்த சீனிவாசன் ராமநாதபுரம் 2வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவர் ராமநாதபும் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் ஸ்தானிகர் சீனிவாசனை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-2ல் நேற்று மனு செய்தனர்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை