உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / லக்னோ டூ கீழக்கரை 2,000 கி.மீ., பறந்த புறா

லக்னோ டூ கீழக்கரை 2,000 கி.மீ., பறந்த புறா

கீழக்கரை:லக்னோவில் இருந்து விடப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையை சேர்ந்த ஹோமர் பந்தய புறா, 2,000 கி.மீ., கடந்து சாதனை படைத்தது.கீழக்கரை, பட்டாணியப்பா தெருவை சேர்ந்தவர் முஷ்ரப், 28. இவர், புறாக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார். இவரது, 2 வயது ஹோமர் இன பந்தய புறாவை ஏப்., 10ல் லக்னோவிற்கு கொண்டு சென்றார்.அங்கு காலை, 6:50 மணிக்கு புறா பறக்கவிடப்பட்டது. இந்த பந்தயத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 13 புறாக்கள் இடம் பெற்றன. இந்நிலையில், 62 நாட்களுக்கு பின், முஷ்ரப் வளர்த்த ஹோமர் புறா நேற்று முன்தினம் மாலை அவரது இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தது.முஷ்ரப் கூறுகையில், ''இங்கிருந்து ரயிலில் லக்னோ கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள குறிப்பிட்ட இடத்தில் புறாக்கள் திறந்து விடப்பட்டன. அதற்கு முன்பாக புறாவின் காலில் சங்கேத குறியீடுகள் மற்றும் எண் வரையப்பட்டிருந்தது.''அந்த வகையில் என் புறா, 62 நாட்களில் 2,000 கி.மீ., கடந்து முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது,'' என்றார்.அவருக்கு புறா வளர்ப்போர் குழுமத்தின் சார்பில் சான்றிதழ், சால்வை வழங்கி பாராட்டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ