உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் சாலையில் கட்டுமான பொருள் குவியல்: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம் சாலையில் கட்டுமான பொருள் குவியல்: பக்தர்கள் அவதி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் சாலையில் கட்டுமானப் பொருள் குவிந்து கிடப்பதால் பக்தர்கள் அவதிப் படுகின்றனர். ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான வாகனத்தில் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயிலுக்கு செல்லும் பிரதான சாலை வழியாக கார் பார்க்கிங் அக்னி தீர்த்த கடற்கரை செல்கின்றனர். இதில் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல் வரை சாலையின் இருபுறம் உள்ள 95 சதவீதம் விடுதிகளில் கார் பார்க்கிங் இல்லாததால் வாகனங்களை சாலை ஓரமாகவே நிறுத்துகின்றனர். மேலும் கோயில் மேலத்தெரு சாலை ஓரத்தில் கட்டுமானப் பணிகளுக்காக சாலை ஓரத்தில் கட்டுமான பொருட்களை கொட்டி வைக்கின்றனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள், உள்ளூர் மக்கள் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். ஆகையால் போக்குவரத்திற்கு இடையூறாக சாலை ஓரத்தில் நிறுத்தும் வாகனங்களை பறிமுதல் செய்து, கட்டுமான பொருட்களை குவித்து வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., சந்தீஷ் உத்தரவிட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ