உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஏர்வாடியில் கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வாங்க; : யாத்ரீகர்கள் கோரிக்கை

ஏர்வாடியில் கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வாங்க; : யாத்ரீகர்கள் கோரிக்கை

கீழக்கரை : ஏர்வாடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசு சார்பில், கட்டப்பட்டு பூட்டியுள்ள கழிப்பறை வளாகங்களை, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என யாத்ரீகர்கள் வலியுறுத்தினர்.ஏர்வாடி தர்காவிற்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர். ஏர்வாடி ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள ஐந்து எண்ணிக்கையிலான கழிப்பறைகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கழிப்பறை வளாகம், மார்க்கெட் பகுதியில் உள்ள கழிப்பறைகள் பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.யாத்ரீகர்கள் கூறியதாவது: ஏர்வாடியில் கழிப்பறைகள் பூட்டியுள்ளதால் இயற்கை உபாதையை கழிக்க திறந்தவெளியை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏர்வாடி ஊராட்சி நிர்வாகத்தினர் உரிய முறையில் கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி