உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காலை உணவு 2 பள்ளிக்கு விரிவுபடுத்த திட்டம்

காலை உணவு 2 பள்ளிக்கு விரிவுபடுத்த திட்டம்

திருவாடானை: தொண்டியில் அரசு உதவி பெறும் 2 பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.முதல்வரின் காலை உணவு திட்டம் 2022 செப்., ல் துவங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் கூறுகையில், முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சியில் இரண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி