மேலும் செய்திகள்
ஹெலிகாப்டர் விபத்து குஜராத்தில் 3 பேர் பலி
06-Jan-2025
ராமநாதபுரம்: “இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு தொடர்பான பணியை, பறக்கும் கண்காணிப்பு கருவியான ட்ரோன் வாயிலாக கண்காணிக்க திட்டமிடப்பட்டு உள்ளது,” என, இந்திய காவல்படையின் கிழக்கு, வட கிழக்கு மண்டல கூடுதல் தலைமை இயக்குனர் டோனி மைக்கேல் தெரிவித்தார்.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர காவல் படை முகாமிற்கு வந்த அவர் கூறியதாவது:கடலில் நடைபெறும் சட்ட விரோத செயல்கள், போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க, இந்தியா - இலங்கை கடலோர காவல் படை சார்பில் கூட்டு ரோந்து செல்ல ஆலோசனை நடக்கிறது. இருநாட்டு கடலோரங்களில் சர்வதேச கடல் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு தொடர்பாக, ட்ரோனில் கண்காணிக்கும் பணி துவங்கப்படவுள்ளது. கடலோர காவல் படைக்கு, 60 நவீன ரோந்து படகுகள் புதிதாக வரவுள்ளன.இந்திய மீனவர்கள், எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் செல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இதுபோன்ற செயல்களால் இரு நாடுகளுக்கும் பாதகம் ஏற்படும். எண்ணெய் கப்பல்கள் விபத்தில் சிக்குவதால் கடல் வளம் பாதிக்கப்படுகிறது. அதை பாதுகாக்க, 100 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
06-Jan-2025