உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முதுகுளத்துார் கிராமங்களில் உழவுப்பணி்

முதுகுளத்துார் கிராமங்களில் உழவுப்பணி்

முதுகுளத்துார், : முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் விவசாயிகள் நிலத்தை உழவு செய்யும் பணியில் தீவிரம் காட்டுகின்றனர். முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி பயிராக நெல் விவசாயம் செய்தனர். அதன் பிறகு ஒரு சில விவசாயிகள் மிளகாய், பருத்தி, சிறுதானிய பயிர்கள் விவசாயம் செய்தனர். முதுகுளத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தது. இதனால் விவசாய நிலங்கள் ஈரப்பதமாக உள்ளது. இந்நிலையில் முது குளத்துார் அருகே செல்வநாயகபுரம், கடம்பன் குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலத்தை டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இன்னும் சில நாட்களில் நெல் விதைப்பு செய்ய உள்ளதால் தற்போது பெய்த மழையால் உழவு செய்யும் பணியில் ஈடுபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி