உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இரவு நேர மினி பார் ஆகும் கலெக்டர் அலுவலக வளாகம் போலீஸ் நடவடிக்கை தேவை

இரவு நேர மினி பார் ஆகும் கலெக்டர் அலுவலக வளாகம் போலீஸ் நடவடிக்கை தேவை

பட்டணம் காத்தான் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை சிலர் இரவு நேர மது அருந்தும் மினி பாராக பயன்படுத்துவதால் அரசு அலுவலகங்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.பட்டணம்காத்தான் ஊராட்சி சேதுபதி நகரில் கலெக்டர் அலுவலக பெருந்திட்டம் வளாகத்தில் பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் முதன்மை கல்வி அலுவலகம், மகிளா நீதிமன்றம், ஆதார் புகைப்பட மையம், இ-சேவை மையம், மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன.இதுபோக வளாகத்தில் விளையாட்டு அரங்கம், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம், வேளாண் இணை இயக்குனர் அலுவலகம், மகளிர் திட்டம், உணவு பாதுகாப்புத்துறை, மீன்வளத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, மாவட்ட தொழில் மையம் என பல அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம் பகுதி உட்பட பல இடங்களில் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இவ்விடங்களை சிலர் இரவு நேரத்தில் மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் அருந்துவதற்கு பயன்படுத்துகின்றனர்.காலி இடங்களில் மதுபாட்டிகள், பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது. இரவு நேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தின் பாதுகாப்பு கேள்விகுறியாகி உள்ளதாக அலுவலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். போலீசார் ரோந்துபணியை அதிகரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ