உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவலர் தினம் அனுசரிப்பு

காவலர் தினம் அனுசரிப்பு

ராமநாதபுரம்: தமிழக போலீசை கவுரவிக்கும் வகையில் 1859ல் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டம் நிறைவேற்றப்பட்ட செப்.,6 காவலர் தினமாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவித்தார். அதன்படி நேற்று ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தினம் அனுசரிக்கப்பட்டது. எஸ்.பி.,சந்தீஷ் தலைமையில் போலீசார் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பணியின் போது உயிர்நீத்த போலீசாருக்கு மரியாதை செலுத்தினார். கலவரக் கூட்டத்தை கலைப்பதற்கான களப்பயிற்சி ஒத்திகையில் போலீசாருக்கு துப்பாக்கிசூடு பயிற்சி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை