உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளி பாடபுத்தகங்கள் பதுக்கலா போலீசார் விசாரணை

பள்ளி பாடபுத்தகங்கள் பதுக்கலா போலீசார் விசாரணை

திருவாடானை: திருவாடானை அருகே பள்ளி பாடபுத்தகங்கள் பதுக்கி வைக்கபட்டதா என போலீசார் விசாரித்தனர்.திருவாடானை வட்டார வளமையத்திலிருந்து பள்ளிகளுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி புத்தகங்கள் வழங்கும் பணி நடந்தது. நேற்று சரக்கு வாகனத்தில் புத்தகங்கள் ஏற்றிச்சென்றனர்.இந்நிலையில் முகிழ்த்தகம் கிராமத்தில் ஒரு வீட்டு முன்பு புத்தகங்கள் மூடை, மூடையாக இருப்பதை பார்த்து அப்பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.இது குறித்து போலீசார் கூறுகையில், சரக்கு வாகனத்தில் புத்தகங்கள் ஏற்றிச் சென்றனர்.டிரைவர் பிரவீன் ஓட்டினார். முகிழ்த்தகம் முத்தமிழ் நகர் அருகே சென்றபோது டயர் வெடித்தது. அருகிலிருந்த வீட்டில் புத்தகங்களை இறக்கி வைத்துவிட்டு, டிரைவர் வாகனத்தில் மாற்று டயர் வைத்து சரி செய்தார். இதை பார்த்த சிலர் தவறான தகவல் கொடுத்துள்ளனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ