உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

உண்டியல் திருட்டுகடலாடி: கடலாடி அருகே ஏ.புனவாசல் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஏந்தல் காளியம்மன் கோயில் உள்ளது. கோயிலில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம நபர்கள் சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தி விட்டு உண்டியலை உடைத்து காணிக்கைகளை திருடி சென்றுள்ளனர். கோயில் நிர்வாகம் சார்பில் கடலாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரிக்கின்றனர்.பஸ் மோதி ஒருவர் பலிதேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே புல்லங்குடியை சேர்ந்தவர் வேலுச்சாமி 55. இவர் நேற்று காலை திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புல்லங்குடி விலக்கு பகுதியில் சைக்கிளில் ரோட்டைக் கடக்க முயன்றார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டினம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதியதில் படுகாயம் அடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்தில் பலியானார். புகாரில் அரசு பஸ் டிரைவர் பரமக்குடி கும்முகோட்டையை சேர்ந்த பழனிக்குமார் 35, மீது தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை