போலீசார் வாகனங்கள் ஓட்டும்போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணியுங்கள் சந்தீஷ் எஸ்.பி., அறிவுரை
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் போலீசாரின் வாகன தணிக்கையை பார்வையிட்ட சந்தீஷ் எஸ்.பி., போலீசார் வாகனங்களை இயக்கும் போது சீட் பெல்ட், ஹெல்மெட் அணிவது அவசியம் என அறிவுறுத்தினார். ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் வாகனங்கள்தணிக்கை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சந்தீஷ் எஸ்.பி., ராமநாதபுரம் ஏ.எஸ்.பி., சிவராமன்பங்கேற்றனர். இதில் 173 போலீசாரின் வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் 89 இருசக்கர வாகனங்கள், 84 நான்கு சக்கர வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சந்தீஷ் எஸ்.பி., பேசுகையில், போலீசார் வாகனங்களை இயக்கும் போது விதிமுறைகளின் படி சீட் பெல்ட் கண்டிப்பாக அணிய வேண்டும். இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவர்கள் ெஹல்மெட் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கினார்.வாகன தணிக்கை ஏற்பாடுகளை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் செய்திருந்தார். புதிய மோப்ப நாய்
மோப்ப நாய் பிரிவில் புதிதாக வாங்கப்பட்டுள்ள பெண் நாய்க்கு வெடிகுண்டை கண்டறியும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பெண் நாய்க்கு தேவசேனா என பெயரிட்டு நாய்களுக்கு பயிற்சியளிக்க முதன் முறையாக இரு பெண் போலீசாரை நியமித்துள்ளார். மோப்ப நாய் பிரிவில் குற்ற சம்பவங்களை கண்டறிய இரு நாய்களும், வெடிகுண்டு கண்டறிய ஒரு நாயும், கஞ்சா போன்ற போதை பொருள் கண்டறிய ஒரு நாய் என நான்கு நாய்கள் உள்ளன. தற்போது புதிய நாயையும் சேர்த்து மோப்ப நாய் பிரிவில் 5 நாய்கள் உள்ளன.