மேலும் செய்திகள்
அரிசியில் மண்ணை கொட்டி தொந்தரவு: மூதாட்டி புகார்
20-May-2025
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் உடலில் காயங்களுடன் மனுஅளிக்க வந்த முதியவர் வைத்திருந்த அரிவாளை பறிமுதல் செய்து அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.கும்பரம் அருகே மூக்கர் பிள்ளை வலசை கிராமத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் 58, உடலில் காயங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அவரை போலீசார் சோதனையிட்டபோது பையில் அரிவாள் இருந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில் முத்துக்கருப்பன் பனை ஓலையில் கூடை செய்வதற்காக அரிவாள் வைத்திருப்பதாகவும், தன்னை சிலர் தாக்கிவிட்டனர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். சம்பந்தபட்ட உச்சிபுளி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க ஆலோசனை வழங்கி முத்துகருப்பனை போலீசார் அனுப்பி வைத்தனர்.
20-May-2025