உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவலர்  வீரவணக்க நாள் அனுசரிப்பு

காவலர்  வீரவணக்க நாள் அனுசரிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீரவணக்க நாள்அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அக்.,21ல் காவலர் வீரவணக்க நாள்அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1959ம் ஆண்டில்லடாக் பகுதியில்சீனப்படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் 10 மத்திய ரிசர்வ் போலீஸ்படை (சி.ஆர்.பி.எப்.,) வீரர்கள் கொல்லப்பட்டதை நினைவு கூரும் விதமாகவும், காவல்துறையில் பணியில் இருந்த போது உயிர் தியாகம் செய்தகாவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும் இந்த நாள் ஆண்டுதோறும்அனுசரிக்கப்படுகிறது. நேற்று இந்நாளையொட்டி ராமநாதபுரம் ஆயதப்படை மைதானத்தில் நடந்தநிகழ்ச்சியில் காவல்துறையில் வீரமரணம் அடைந்தவர்களுக்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், டி.ஐ.ஜி., மூர்த்தி, எஸ்.பி., சந்தீஷ் ஆகியோர்மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். மழையில் நனைந்தபடியே டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், போலீசார் பங்கேற்றனர். *கமுதி தனி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள போலீசார் நினைவுத்துாணில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. பணியின் போது உயிர் நீத்த போலீசாரின் நினைவை போற்றி மரியாதை செலுத்தும் வகையில் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. டி.எஸ்.பி., இளஞ்செழியன் தலைமையில் மலர்வளையம் வைத்து போலீசார் மரியாதை செலுத்தினர்.பின்பு 30 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ