மேலும் செய்திகள்
அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்
19-Mar-2025
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடியை பிரித்து மாற்றம் செய்வது தொடர்பாக அனைத்துக்கட்சினர் கருத்து கேட்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார். தலைமை தேர்தல் கமிஷனர் அறிவுறுத்தலின்படி 1200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடியை பிரித்து மாற்றம் செய்வது, அப்போது அதே பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி மையத்தில் சேர்ப்பது தொடர்பாக கட்சியினரிடம் கருத்து கேட்கப் பட்டது. பரமக்குடி சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தவச்செல்வம், கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
19-Mar-2025