மாசடைந்த கிணற்று நீர் விநியோகம்; செங்குடி கிராம மக்கள் பாதிப்பு
ஆர்.எஸ்.மங்கலம் : செங்குடி ஊராட்சியில் செங்குடி, மேலசெங்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செங்குடி கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள திறந்த நிலை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி கூட்டு குடிநீர் வராத நிலையில் ஊராட்சி சார்பில் வழங்கப்படும் தண்ணீரையே பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் திறந்த நிலை கிணறு முறையாக சுத்தம் செய்யப்படாததால் மாசு படிந்து துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படக்கூடும் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் திறந்த நிலை கிணற்றை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.