உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஜமாத் சார்பில் குளம் துார்வாரும் பணி

ஜமாத் சார்பில் குளம் துார்வாரும் பணி

தொண்டி : தொண்டி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே வண்ணான்குளத்தில் ஆகாயதாமரை செடிகள் அடர்ந்து மக்கள் குளிக்க பயன்படுத்த முடியாத வகையில் இருந்தது. தற்போது இக்குளத்தில் தொண்டி தெற்கு தெரு ஜமாத் சார்பில் துார்வாரும் பணி துவங்கியுள்ளது. இது குறித்து தெற்கு தெரு ஜமாத் செயலாளர் சேகுஅலி கூறியதாவது:இக்குளத்தை பல ஆண்டுகளாக துார்வாராமல் இருந்ததால் மக்கள் பயன்படுத்த முடியவில்லை. எனவே அரசை எதிர்பார்க்காமல் தெற்கு தெரு ஜமாத் சார்பில் துார்வார முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் துவங்கியுள்ளது.முதல் கட்டமாக குளத்தில் தேங்கியுள்ள நீர் வெளியேற்றபட்டுள்ளது. இரு மணல் அள்ளும் இயந்திரம் மூலம் குளம் சுத்தப்படுத்தப்பட்டு, ஆழப்படுத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி