உள்ளூர் செய்திகள்

பொங்கல் விழா

முதுகுளத்துார்: முதுகுளத்துார் செல்லி அம்மன் கோயிலில் வெள்ளாவி மாடன் 55ம் ஆண்டு துறை பொங்கல் விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். முக்கிய வீதிகளில் பொதுமக்கள் பொங்கல் பானையை ஊர்வலமாக துாக்கி செல்லிஅம்மன் கோயில் சென்றனர். கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மூலவரான செல்லிஅம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 16 வகை அபிஷேகம், தீபாரதனை நடந்தது. 108 விளக்கு பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நகர் சலவையாளர்கள் சங்கம் மற்றும் இளைஞர் சங்கத்தினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !