உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பனையூரம்மன் கோயிலில் 500 பானைகளில் பொங்கல்

பனையூரம்மன் கோயிலில் 500 பானைகளில் பொங்கல்

திருப்புல்லாணி : திருப்புல்லாணி அருகே தாதனேந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட பள்ளப்பச்சேரி கிராமத்தில் உள்ள பனையூர் அம்மன் கோயிலில் 500 பானைகளில் பொங்கலிட்டு வழிபாடு நடந்தது.நேற்று மதியம் 2:00 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள வளாகத்தில் வரிசையாக பெண்கள் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியதும் மங்கள ஒலி எழுப்பி குலவை இட்டனர். நேற்று காலை முதல் மாலை வரை நடந்த விழாவில் அருகே உள்ள புல்லாணியம்மன், கோவிந்தன் கோயில், பனையூர் அம்மன், அய்யனார், நொண்டி கருப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது.ஏராளமான கோழி, சேவல்கள் படையலிட்டு தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் பூஜைகளை பக்தர்கள் செய்தனர். அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. பள்ளபச்சேரியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் நடக்கும் முளைப்பாரி விழாவை முன்னிட்டு முன்கூட்டியே ஏராளமானோர் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடக்கிறது.திருப்புல்லாணி யூனியன் சேர்மன் புல்லாணி, ஊராட்சி தலைவர் கோகிலா, ராஜேந்திரன், ஜெயமுருகன், ரவி உட்பட ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை