உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி முத்தாலம்மனுக்கு பொங்கல் படையல் பூஜை

பரமக்குடி முத்தாலம்மனுக்கு பொங்கல் படையல் பூஜை

பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் நடந்த செவ்வாய் சாட்டு விழாவில் அம்மனுக்கு பொங்கல் படையல் வைத்து பூஜை செய்யப்பட்டது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் செவ்வாய் சாட்டு விழாவையொட்டி அம்மன் தானே காப்பு கட்டிக் கொள்வதாக ஐதீகம் உள்ளது. இதன்படி 8 நாட்கள் நடந்த விழாவில் தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார்.நிறைவு நாளில் அம்மனுக்கு பொங்கல் படையல் வைக்கப்பட்டு சிறப்பு நெய்வேத்தியம் செய்யப்பட்டது. அப்போது அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு துாப தீப ஆராதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி