உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இடைவிடாமல் சிலம்பம் சுற்றிய பூக்குளம் மாணவர்கள்

இடைவிடாமல் சிலம்பம் சுற்றிய பூக்குளம் மாணவர்கள்

முதுகுளத்துார்: திருப்பூரில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 79 நிமிடம் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி பூக்குளம் மாணவர்கள் சாதனை படைத்தனர். திருப்பூரில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாநில அளவில் 79 நிமிடம் 79 நொடி இடைவிடாமல் சிலம்பம் சுற்றும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் சிலம்பம் புலிமுருகன் சிலம்பப் பயிற்சி பள்ளி மாணவர்கள், பூக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 79 நிமிடம் 79 நொடி இடைவிடாமல் சிலம்பம் சுற்றி கிரகாம்பெல் உலக சாதனை புத்தகத்தில் பூக்குளம் மாணவர்கள் சாதனை படைத்தனர். பூக்குளம் ஊராட்சி ஒன்றிய மாணவர்கள், மற்றும் புலி முருகன் சிலம்பம் பயிற்சி பள்ளி மாஸ்டர் முருகன் ஆகியோரை தலைமையாசிரியர் சாந்தி உட்பட பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ