உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் ஆள் பற்றாக்குறையால் தபால் அனுப்ப வழியில்லாத தபால் நிலையம்

கமுதியில் ஆள் பற்றாக்குறையால் தபால் அனுப்ப வழியில்லாத தபால் நிலையம்

கமுதி: கமுதியில் தபால் நிலையத்தில் தபால்கள் வாங்க தனி கவுன்டர் இருந்தும் ஆட்கள் பற்றாக்குறையால் நீண்ட நேரம் மக்கள் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.கமுதி தாலுகாவிற்கு உட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு பரிவர்த்தனைகள், சிறு சேமிப்பு, இன்சூரன்ஸ், தபால்கள் அனுப்புவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.இந்நிலையில் தபால் நிலையத்தில் தபால்கள் வாங்க தனி கவுன்டர் இருந்தும் ஆட்கள் பற்றாக்குறையால் முறையாக செயல்படவில்லை. இதனால் பொதுமக்களிடமிருந்து தபால்கள் வாங்க ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய நிலையும் உள்ளது.கமுதி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: கமுதி தபால் நிலையத்தில் தனியாக கவுன்டர்கள் இருந்தும் தபால் பெறுவதற்கு ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால் சேமிப்பு கணக்கு ஊழியரே தபால் சேவையும் செய்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. தபால் அனுப்புவதற்காக தான் தபால் நிலையம் உருவாகி இருந்த சூழ்நிலையில் தற்போது தபால் அனுப்ப வழியில்லாத தபால் நிலையம் என்ற அவலம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தனியார் கூரியரை நோக்கி மக்கள் செல்லும் நிலை ஏற்படும். எனவே கமுதி தபால் நிலையத்தில் தபால்களுக்கு தனி கவுன்டர்கள் செயல்பட்டு பணியாளர்கள் பணியமர்த்தி செயல்படுத்த தபால் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !