மலட்டாறு பசும்பொன்னார் நகரில் பள்ளம் மூடல்
கடலாடி : கடலாடி அருகே பெரியகுளம் ஊராட்சி பசும்பொன்னார் நகரில் காவிரி குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் மூடப்பட்டுள்ளது.பசும்பொன்னார் நகரில் காவிரி குடிநீர் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருந்தது. 5 அடி ஆழமும் 5 அடி நீளமும் கொண்ட பள்ளத்தால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதியவர்கள் மற்றும் கால்நடைகள் தவறி விழுந்தன. இது குறித்து தினமலர் நாளிதழில் ஜூன் 27ல் படத்துடன் செய்தி வெளியானது. இதன் காரணமாக பள்ளம் மூடப்பட்டு சாலை பணிகள் சீரமைக்கப்பட்டது. தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.