தர்கா ரோட்டில் பள்ளங்கள்: தினமும் நடக்கிறது விபத்து
தொண்டி,: தொண்டி தர்கா தெருவில் நடுரோட்டில் பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொண்டியில் தர்கா தெரு உள்ளது. இத் தெரு கடற்கரைக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இத் தெருவில் நடுரோட்டில் பள்ளம் உள்ளது. டூவீலர்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து காயமடைகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறிய தாவது: நடுரோட்டில் பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்காமல் சிமென்ட் சிலாப்பை போட்டு மூடி வைத்துள்ளனர். இந்த ரோட்டில் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்கின்றன. இரவு நேரங்களில் விபத்து அதிகம் நடக்கிறது. பேரூராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் பயனில்லை. பள்ளத்தை நிரந்தரமாக மூடி ரோட்டை சீரமைக்க வேண்டும் என்றனர்.