மேலும் செய்திகள்
டி.ஐ.ஜி., பொறுப்பேற்பு
01-Apr-2025
ராமநாதபுரம்: கோடை காலம் துவங்கியுள்ளதால் ராமநாதபுரத்தில் மண் பானைகள் விற்பனை அதிகரித்துள்ளது.ராமநாதபுரம் பகுதியில் வெயிலின் தாகத்தை தணிக்க இயற்கை முறையில் குளிர்ந்த நீரை பருகுவதற்காக மண் பானைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. வியாபாரிகள் மானாமதுரை மண் பானைகள் அரண்மனை, சந்தை பகுதிகளில் விற்கின்றனர். திருகு குழாய் பொருத்தப்பட்ட பானை ரூ.150 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது. கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் தற்போதே மண்பானைகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். கடந்த ஆண்டை விட இவ்வாண்டு மண் பானையின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை சற்று உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
01-Apr-2025