மழை வேண்டி பிரார்த்தனை
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயிலில் மழை வேண்டி பக்தர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். முன்னதாக கணபதி ஹோமம் செய்யப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கூழ், சுண்டல், பொங்கல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.