உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரிசோதனை செய்ய கட்டடம் இன்றி கர்ப்பிணிகள் பாதிப்பு

பரிசோதனை செய்ய கட்டடம் இன்றி கர்ப்பிணிகள் பாதிப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கான பரிசோதனை கட்டடம் பயன்பாட்டிற்கு வராததால் கர்ப்பிணிகள் பாதிப்படைந்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டாரத்திற்கு உட்பட்ட கர்ப்பிணிகள் பயனடையும் வகையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப கால பிரச்னைகள் குறித்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் கர்ப்பிணிகள் பரிசோதனை, பிரசவ அறைகள் சேதம் அடைந்தன. இதையடுத்து ரூ.8 லட்சத்தில் கர்ப்பிணிகள் அறையை பராமரிப்பு செய்து புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், பிரசவ அறை பணிகள் முழுமை அடையாது கட்டடம் முறையாக ஒப்படைக்கப்படாததால் ஓராண்டுக்கும் மேலாக கர்ப்பிணிகள் முறையான பரிசோதனை கட்டடம் இன்றி அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆர்.எஸ். மங்கலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளின் சிரமத்தை தவிர்க்க பரிசோதனை கட்டடப் பணியை தரமாக விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை