உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடக்க கூட்டுறவு வங்கி  பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்க கூட்டுறவு வங்கி  பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க மாவட்டத்தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் குஞ்சரபாண்டியன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். புளூடூத் மூலம் மின்னணு எடை தராசு இணைக்கப்பட்டு கருவிழித்திரை பதிவு செய்து பொருட்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஆகையால் இந்த நடமுறையை கைவிட வேண்டும்.ரேஷன் கடைகளுக்கு சரியான அளவில் பொருட்களை வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் பணி வழங்கக் கூடாது. பணி மூப்பு அடிப்படையில் விற்பனையாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். சங்க மாவட்ட கவுரவத்தலைவர் முத்துராமலிங்கம், செயலாளர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ