உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சஸ்பெண்ட்

ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே சித்தார்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முகமது மொய்தீன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.தேவிபட்டினம் வட்டார சுகாதார அலுவலக கட்டுப்பாட்டில் சித்தார்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு மருத்துவ அலுவலராக முகமது மொய்தீன் பணிபுரிந்தார். ஆர்.எஸ்.மங்கலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் பற்றாக்குறை இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் அர்ஜுன்குமார் இவருக்கு அங்கு மாற்று பணி வழங்கியுள்ளார். அதனை ஏற்காமல் டாக்டர் முகமது மொய்தீன் நேற்று ராமநாதபுரம் சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு துணை இயக்குனர் டாக்டர் அர்ஜுன்குமாரிடம் தகாத வார்த்தையால் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். டாக்டர் அர்ஜுன்குமார் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து டாக்டர் முகமது மொய்தீனை சஸ்பெண்ட் செய்தும் துணை இயக்குனர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை