உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே அடந்தனார்கோட்டை சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் தேவதாஸ் ராஜன் பாபு தலைமையில் நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர்கள் தமிழரசி, தேன்மொழி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை மேரி இன்னோசென்ட் வரவேற்றார்.மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வட்டார வள மையம் மேற்பார்வையாளர் சுரேந்திரன், ஆசிரிய பயிற்றுநர் உலகநாதன், பயிற்சி ஆயர் சாலமன் ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி