மேலும் செய்திகள்
மழையை எதிர்பார்த்து ஆனந்துார் விவசாயிகள்
28-Oct-2024
ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் உரக்கடையினர் உரம் கொள்முதல் செய்வதற்கு பணம் செலுத்தியும், உரம் விநியோகம் செய்யப்படாததால், உரத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் செப்., மாதத்தில் விதைப்பு செய்யப்பட்ட நெல் பயிர்கள் தற்போது வளர்ச்சி நிலையில் உள்ளன. இதனால், சில பகுதிகளில் தண்ணீர் உள்ள நெல் வயலில் உரமிடும் பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் போதிய பருவமழை இல்லாததன் காரணமாக, பருவ மழையை எதிர்பார்த்து உரமிடும் பணியை தாமதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள உரக்கடை உரிமையாளர்கள் யூரியா, பி.ஏ.பி., 20:20 காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் கொள்முதல் செய்வதற்கு பணம் செலுத்தி 10 நாட்களுக்கு மேல் கடந்த நிலையிலும், உர நிறுவனங்களில் இருந்து உரம் விநியோகம் செய்யப்படாத நிலை உள்ளது. தற்போது கையிருப்பில் தனியார் கடைகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் குறைந்த அளவிலான உரமூடைகள் மட்டுமே இருப்பில் உள்ளது. நெல் பயிருக்கு ஏற்ற மழை பெய்யும் பட்சத்தில், அனைத்து விவசாயிகளும் உரமிடும் பணியை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அப்போது உர தேவை அதிகரிக்கும். ஆனால் கையிருப்பில் குறைந்த அளவிலான உர மூடைகளே இருப்பில் உள்ளதால், மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம், கூடுதல்உரம் உடைகளை விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதுடன், மாவட்டத்தில் கூடுதல் உரங்களை கொள்முதல் செய்து இருப்பு வைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.
28-Oct-2024