உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அண்ணாமலை கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் :118 பேர் கைது  முதல்வர் படத்தை எரிக்க முயற்சி 

அண்ணாமலை கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் :118 பேர் கைது  முதல்வர் படத்தை எரிக்க முயற்சி 

ராமநாதபுரம்: -பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய 118 பேரை போலீசார் கைது செய்தனர். முதல்வர் படத்தை எரிக்க முயன்ற போது போலீசார் தடுத்து பறித்துச் சென்றனர். சென்னையில் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக போராட்டம் நடத்த சென்ற பா.ஜ., மாநிலத்தலைவர் அண்ணாமலை உட்பட முக்கிய தலைவர்களை அரசு கைது செய்தது. இதனை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ., வினர் ராமநாதபுரம் அரண்மனை முன்பு தமிழக அரசை கண்டித்தும், அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wid6unvv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மாவட்டத்தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, முன்னாள் மாவட்டத்தலைவர் தரணி முருகேசன், மாவட்ட பொதுச்செயலாளர் குமார், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன், மாநில நிர்வாகி ராம்குமார், மாவட்டத்துணைத்தலைவர் குமார், வழக்கறிஞர் சவுந்திரபாண்டியன், ஊராட்சி கவுன்சிலர் முருகன், மாவட்ட செயலாளர் கலையரசி, ஊடகபிரிவு தலைவர் குமரன் உட்பட 7 பெண்கள் உட்பட 118 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் படத்தை தீவைத்து எரிக்க முயன்றனர். படத்தை போலீசார் பறித்துச் சென்றனர். கைது செய்தவர்களை ஏற்றிச்செல்ல வாகனங்கள் கிடைக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேறு வழியின்றி போலீஸ் அதிகாரிகளின் ஜீப்புகளில் ஏற்றிச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ