உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் 1500 வீடுகளுக்கு பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

ராமேஸ்வரத்தில் 1500 வீடுகளுக்கு பட்டா கோரி காத்திருப்பு போராட்டம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் 1500 வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி தாலுகா அலுவலகத்தில் மக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.ராமேஸ்வரம் எம்.ஆர்.டி., நகர், நேதாஜி நகர், ராஜகோபால் நகரில் 1500 குடும்பங்கள் 50 ஆண்டுகளாக வசிக்கின்றனர். இப்பகுதி வனத்துறைக்கு சொந்தமானது என்பதால் இங்குள்ள வீடுகளை காலி செய்யுங்கள் என வனத்துறையினர் அடிக்கடி எச்சரித்தனர்.தரிசு நிலமான இப்பகுதியை 2016ல் காப்புக் காடாகவனத்துறை அறிவித்து வீடுகளை அகற்றி மக்களை வெளியேற சொல்வது கண்டனத்திற்குரியது. எனவே வீடுகளுக்கு பட்டா வழங்கக் கோரி நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகம் முன்பு கிராமத் தலைவர் முனியசாமி தலைமையில் ஏராளமானோர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.தாசில்தார்கள் முரளிதரன், அப்துல்ஜபார், டி.எஸ்.பி., சாந்தமூர்த்தி முன்னிலையில் நடந்த சமரச கூட்டத்தில் இனிமேல் வீடுகளை அப்புறப்படுத்த வனத்துறையினர் வற்புறுத்த மாட்டார்கள் எனவும், அரசுக்கு அறிக்கை அனுப்பி விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்மானத்தில் தெரிவித்தனர். இதன் பின் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், பா.ஜ., மாவட்ட தலைவர் முரளிதரன், முன்னாள் நகராட்சி தலைவர் அர்ச்சுனன், முகவை விளையாட்டு கழக தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் தட்சிணாமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ