முதல்வருக்கு பதிவு தபாலில் புகார் அனுப்பும் போராட்டம்
ராமநாதபுரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பாசிரியர்கள் ஊதிய உயர்வு வலியுறுத்திமுதல்வருக்கு பதிவு தபால் அனுப்பும் போராட்டம் நடந்தது.பள்ளிக்கல்வித்துறையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக சிறப்பு பயிற்றுனர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.இந் நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து தொகுப்பூதிய பணியாளர்களுக்கும் 5 சதவீதம் ஊதியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. கல்வி பணியாளர்களுக்கு மட்டும் 5 சதவீதம் ஊதிய உயர்வு 2 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. அரசின் இந்த பாரபட்சமான போக்கால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறன் சிறப்பு பயிற்றுனர்கள் முதல்வருக்கு கோரிக்கை மனுவை பதிவு தபாலில் அனுப்பும் போராட்டம் ராமநாதபுரம் மாவட்ட தலைமை தபால் அலுவலகத்தில் நடந்தது.அனைத்து மாற்றுத்திறன் பயிற்றுனர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பதிவு தபாலை முதல்வருக்கு அனுப்பினர்.