மேலும் செய்திகள்
முக்காடு போட்டு ஒப்பாரி போராட்டம்
11-Jan-2025
ராமநாதபுரம்: சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் அருகே தலையில் கருப்பு துணியால் முக்காடு அணிந்து ஒப்பாரி போராட்டம் நடந்தது.சங்க ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் பாண்டி தலைமை வகித்தார். மாநிலப்பொருளாளர் தமிழ், அரசு ஊழியர்கள் சங்கம் மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம், செயலாளர் கலீல், முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைளை வலியுறுத்தி கருப்பு துணியை தலையில் முக்காடாக அணிந்து கோஷமிட்டனர். சாலைப்பணியாளர்களின் 41 மாதம் பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாநில நெடுஞ்சாலைகள் அனைத்தையும் தமிழக அரசு நிர்வாக வலியுறுத்தினர்.
11-Jan-2025