உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்: செவிலியர்கள் உறுதி

 தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும்: செவிலியர்கள் உறுதி

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் நான்காம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் செவிலியர்கள் டிச.,18 ல் சென்னையில் போராட்டம் நடத்தினர். செவிலியர்களுக்கு ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு அளிப்பது, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது, கொரோனா காலத்தில் பணி செய்த அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தற்போது மாவட்ட அளவில் டிச.,19 முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்திற்குள் தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தனலெட்சுமி தலைமையில் 150 பேர் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். செவிலியர்களுக்கான கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வரை காத்திருப்பு போராட்டம் தொடரும் என செவிலியர்கள் உறுதியாக உள்ளனர். இதற்கு பல்வேறு மருத்துவ அமைப்புகளும் ஆதரவு அளித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை