உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கமுதியில் வக்ப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

கமுதியில் வக்ப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம்

கமுதி : கமுதியில் எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் வக்ப் உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நடந்தது. நகர் தலைவர் அல்லா பிச்சை தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் அபுபக்கர் சித்திக், மாநில செயலாளர் மார்க், மாவட்ட தலைவர் நுாருல் அமீன் முன்னிலை வகித்தனர். மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உமர் பாரூக் வரவேற்றார். இந்திய அரசியலமைப்பு சட்டவிரோத வக்ப் திருத்த சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், கமுதி பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை அமைக்கவும், அரசு பாலிடெக்னிக் கல்லுாரி அமைக்கவும், பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்பட்டு சிரமப்படும் நாய்களை கருணை கொலை செய்யவும் வலியுறுத்தினர். மேலும் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்கள், ஊழியர்கள் நியமிக்க வேண்டும், கமுதி பேரூராட்சிக்கு உட்பட்ட கண்மாய், குளங்கள் துார்வாரபட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர செயலாளர் சேக் முகமது நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை