களிமண்குண்டு காந்தாரி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவம்
பெரியபட்டினம்: பெரியபட்டினம் அருகே களிமண்குண்டு காந்தாரியம்மன் கோயிலில் 154ம் ஆண்டு முளைக்கொட்டு மற்றும்வருடாந்திர பூக்குழி உற்ஸவம் நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. கற்பக விநாயகர், காந்தாரி அம்மன், தணிகை வேலன், இருளப்பசாமி, ஈஸ்வரி அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்குசிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 32 அடி உயரமுள்ள பிரம்மாண்ட சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு கரகம் எடுத்த பூஜாரி முத்துக்கருப்பன் 15 முறை மீண்டும் மீண்டும் பூக்குழியில் இறங்கினார். அவரை தொடர்ந்து 35 நேர்த்திக்கடன் பக்தர்கள் இறங்கினர். பகலில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை களிமண்குண்டு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.