உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி கோயில்களில் புரட்டாசி, மகாளய விழா

பரமக்குடி கோயில்களில் புரட்டாசி, மகாளய விழா

பரமக்குடி : பரமக்குடியில் உள்ள பெருமாள்,ஆஞ்சநேயர் கோயில்களில் புரட்டாசி முதல் சனி வார மற்றும் மகாளய அமாவாசை வழிபாடு நடந்தது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மூலவர் வஜ்ர கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். உற்ஸவர் ரெங்க மன்னர் மற்றும் தாயார் கிருஷ்ணா அவதாரத்தில் இருந்தனர். எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் மூலவர் திருப்பதி அலங்காரத்திலும், உற்ஸவர் கிருஷ்ணாவதாரத்தில் தாயார் நரகாசுரனை வதம் செய்யும் கோலத்தில் அருள்பாலித்தனர். இதேபோல் அனைத்து பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களிலும் மகாளய அமாவாசையையொட்டி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பலரும் வீடுகளில் அரிசியை பெற்று அன்னதானம் வழங்கினர். தொடர்ந்து நேற்று காலை முதல் மதியம் வரை முன்னோர்களுக்கு பலர் தர்ப்பணம் கொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி