உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாணவர் விடுதியில் தரமான உணவு

மாணவர் விடுதியில் தரமான உணவு

திருவாடானை: ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதியில் மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறது என ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் செல்வி கூறினார்.திருவாடானை சமத்துவபுரம் அருகே உள்ள ஆதிதிராவிடர் நல விடுதியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வி ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது: பிற்படுத்தபட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கீழ் இயங்கும் விடுதி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு இலவசமாக வழங்கபடுகிறது.உணவு பட்டியலில் உள்ளபடி அசைவம், சைவம் என தரமான உணவு வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு நான்குசீருடைகள், போர்வை, தலையணை, 10ம் வகுப்பு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்கப்படுகிறது.ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மாணவர்கள் அதிகம் சேரும் வகையில் வரும் கல்வியாண்டில் பெற்றோர் கூட்டம் நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை