உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி வராகி அம்மனுக்கு ராகு கால அபிஷேகம்

பரமக்குடி வராகி அம்மனுக்கு ராகு கால அபிஷேகம்

பரமக்குடி : -பரமக்குடி சத்தேழு கன்னிமார் கோயிலில் அருள்பாலிக்கும் வராஹி அம்மனுக்கு ராகுகால அபிஷேகம் நடந்தது.பரமக்குடி நகராட்சி அருகில் சத்தேழு கன்னிமார் கோயிலில் தனி சன்னதியில் வராகி அம்மன் அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் ராகு காலத்தில் அபிஷேகம், ஆராதனைகள் நடக்கிறது.பொதுவாக ராகு காலத்தில் எந்த சுப காரியங்களும் நடத்துவது கிடையாது. இதன்படி ராகு காலத்தில் மற்ற கிரகங்களின் ஆற்றல் குறைந்திருக்கும் என்கிறார்கள். அந்த நேரத்தில் அம்மனை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கி வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.இந்நிலையில் வராகி அம்மனுக்கு மஞ்சள் உள்ளிட்ட அபிஷேகங்கள், சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான பெண்கள் மஞ்சள் அரைத்து கொடுத்து அம்மனை வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி