மேலும் செய்திகள்
புதுச்சேரியில் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி
04-Apr-2025
பரமக்குடி: பரமக்குடியில் காலையில் வெயில் கொளுத்திய நிலையில், மதியம் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்ததால் குளிர்ச்சியில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில நாட்களாக பரமக்குடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் குளிர்பானங்கள், இளநீர், தர்பூசணி பழங்களை அதிகம் உண்டு தாகத்தை தணிக்கின்றனர். தொடர்ந்து இளநீர் விலை 80 ரூபாய் வரை இருப்பதால் நடுத்தர மக்களின் எட்டாக்கனியாக மாறி உள்ளது. பழச்சாறுகள் கிளாஸ் 80 முதல் 150 ரூபாய் வரை விற்கிறது. ஆகவே குளிர்பானங்களை தவிர்க்க நினைக்கும் சூழலில் 10 ரூபாய்க்கு பாட்டிலில் கிடைப்பதால் அவற்றை குடிக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். நேற்று காலை வரை வெயில் வாட்டி வதைத்தது. மதியம் 3:00 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் வரை மழை கொட்டி தீர்த்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
04-Apr-2025