உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் குடியிருப்புக்குள் மழைநீரால் அவதி

சக்கரக்கோட்டை ஊராட்சி பகுதியில் குடியிருப்புக்குள் மழைநீரால் அவதி

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி நேரு நகர் 9வது தெருவில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு வாரமாக இப்பகுதியில் தேங்கியுள்ள நீரால் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு தொந்தரவுகளுக்கு ஆளாகியுள்ளனர். வீடுகளில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் தேங்கியுள்ள மழை நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் நிலை உள்ளது. இப்பகுதியில் இரவு நேரங்களில் தேங்கியுள்ள மழைநீரில் விஷ ஜந்துக்கள்வருவதால் குடியிருப்பு மக்கள் நிம்மதியிழந்து வருகின்றனர். அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகம்,ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு புகார் அளித்துள்ளனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இனியாவது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த முன் வர வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ